Monday, 30 December 2013

வாழ்த்துப்பா

யதுகுல யாதவன் வாய் மொழி
கீதை கவி கற்கண்டு - தீதகல
யாத்த இடைமருதர் வாழ்க உடல்
வாதை அவர்க்கு விலக்கு
(பல விகற்ப இன்னிசை வெண்பா)
பாரின் தன்மையும் பார்த்த சாரதியும்
சாராய் பிழிந்து
பாடத் தந்த
இடை மருதர் கேண்மை
பாடப் பாடப் பொல்லாமை
தீரத் தீரத் தீர்ந்தே விடுமே
(இணைக்குறள் ஆசிரியப்பா)

(பாடியவர் - வேதாந்த கவியோகி நாகசுந்தரம்)

No comments:

Post a Comment